“திராவிட பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கே.எஸ். சலம் அவர்ளின் இந்த நூல் இந்திய வரலாற்றைப் பற்றிய சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்விகள் போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் அல்ல. ஆழமான ஆய்வுகளை வேண்டி நிற்கும் கேள்விகள். சிந்து சமவெளி நாகரிகம் அழிக்கப்பட்டதா? உற்பத்தி முறை முரண்பாடுகள் அதற்கு காரணமா? மேய்ச்சல் சமூகங்களுக்கு புல்வெளிகள் வளரவேண்டி, நீர் தங்கு தடையின்றி பாய்தல் வேண்டும். விவசாய சமூகங்களுக்கு நீர் தேக்கம் அவசியம். ஆகவே, மேய்ச்சல் சமூகங்களின் நாயகன் இந்திரன் வஜ்ராயுதத்துடன் நதிகளுக்கு குறுக்கே படுத்திருந்த மலைகளின் இறக்கைகளை உடைத்தாரா, கிருஷ்ணன் காலியமர்த்தனம் செய்தார் என்று புராணகதைகளை சுட்டிக்காட்டியது சரியா? இரும்பு தாதுகள் மத்திய இந்தியாவில் நிறைந்திருக்கையில், இரும்பு தாதுவே இல்லாத கங்கை சமவெளியில்தான் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது சரியா?